விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘மகாநதி’ சீரியலில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் காவேரி விஜய்க்காக இரவு விருந்தை தயாரிக்கிறார். மேலும் அவர் வெண்ணிலா போலவே பேசி காட்டுகிறார். இதனால் விஜய்க்கு காவேரியின் செய்கைகள் மிகவும் பிடித்து போகிறது. இருவருக்கும் காதல் மலரத் தொடங்குகிறது. அந்த அழகிய ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவியில் டாப் ஹிட் சீரியல்களில் ஒன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது ‘மகாநதி’ சீரியல். இந்த சீரியலில் விஜய் மற்றும் காவேரி இருவருக்கும் ஒப்பந்த அடிப்படையில் திருமணம் நடைபெறுகிறது. ஆரம்பத்தில் இந்த திருமணத்தில் விருப்பமில்லாத போதிலும் தற்போது விஜய் மற்றும் காவேரி இருவரும் இணைந்து வாழத் தொடங்கி இருக்கின்றனர். விஜய் தனக்கு வெண்ணிலா என்ற பெண்ணுடன் காதல் இருந்ததாக கூறுகிறார்.

எனவே காவேரி வெண்ணிலா போலவே நடித்துக் காட்டுகிறார். விஜய்க்காக அவருக்கு பிடித்த சிக்கன் தந்தூரி சமைத்துக் கொடுத்து அசத்துகிறார். மேலும் வெண்ணிலா போலவே அவரிடம் பேசி காட்டுகிறார். இதனால் இருவருக்குள்ளும் காதல் மலர்கிறது. நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television