விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாக இருக்கிறது. அதில் ஈஸ்வரியை திருப்பி வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுமாறு கோபி பாக்யாவிடம் சென்று பேசிக் கொண்டிருக்கிறார். பாக்யாவும் ஈஸ்வரியை வீட்டிற்கு அழைத்துச் செல்ல அவரிடம் நேரில் பேசுகிறார். ஆனால் கோபி வருத்தப்படுவான் என்று சொல்லி ஈஸ்வரி வீட்டுக்கு வர மறுத்து விடுகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கோபியும் ராதிகாவும் பாக்யா வீட்டில் இருந்து வெளியேறும் பொழுது ஈஸ்வரியும் அவர்களுடன் வெளியேறுகிறார். ஆனால் ராதிகாவின் தாயார் கமலாவுக்கும் ஈஸ்வரிக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்து வருகிறது. இது கோபிக்கு மிகுந்த மன உளைச்சலை தருகிறது. எனவே அவர் ஈஸ்வரியை மீண்டும் பாக்யா வீட்டிற்கு திருப்பி அனுப்ப பாக்யாவிடம் சென்று பேச்சு வார்த்தை நடத்துகிறார். அப்போது கோவிலில் ஈஸ்வரியை சந்திக்கும் பாக்யா அவரை திருப்பி வீட்டிற்கு வந்து விடுமாறு அழைக்கிறார்.

ஆனால் ராதிகா வீட்டில் இருப்பதை கோபி விரும்பவில்லை என்பதை அறியாத ஈஸ்வரி, நான் வரவில்லை நான் வந்தால் கோபி வருத்தப்படுவான் என வெள்ளந்தியாக கூறிக் கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television