சின்னத்திரையில் சீரியல்களுக்கு என்ற தனி இடம் எப்பொழுதும் ரசிகர்களிடம் உண்டு. அந்த வரிசையில் சன் டிவி தொடங்கி தற்போது விஜய் தொலைக்காட்சி வரை பல நாடகங்களை ஒளிபரப்பி தனக்கான ரசிகர்களை வைத்து உள்ளனர். தற்போது சன்டிவியை போலவே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களுக்கும் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமானது உருவாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அப்படி ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் தற்போது முத்து மற்றும் மீனாவின் நகையை மனோஜ் திருடுகிறார். இதற்கு விஜயா உடந்தையாக இருந்தது மட்டுமின்றி, நகைகளை கவரிங் ஆக மாற்றி அதற்கு காரணம் மீனா எனவும் பழி போடுகிறார். முத்து வைத்த டெஸ்டில் மனோஜ் மற்றும் விஜயா இருவரும் சிக்கி கொள்கின்றனர்.

தற்போது அண்ணாமலை இதனால் விஜயா மீது கடும் கோபத்தில் உள்ளார். இந்நிலையில் விஜயாவையும் அண்ணாமலையையும் திட்டம் போட்டு முத்து சேர்த்து வைக்கின்றார். அண்ணாமலை, விஜயாவிடம் பழையமாதிரி பேசி பழகுவது விஜயாவுக்கு சந்தோசத்தை அளித்து இருக்கிறது. இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.
Embed Video Credits : VIJAY TELEVISION