யாரடி நீ மோகினி என்ற தொடரில் நடித்து சின்னத்திரைக்கு அறிமுகமாகியவர் சீரியல் நடிகை நட்சத்திரா. இந்த தொடர் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது. கேரளாவை சேர்ந்த இவர் கிடா பூசாரி மகுடி என்ற படத்தில் நடித்து வெள்ளித்திரையில் அறிமுகம் ஆகினார். பின்னர் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் தொடர்ந்து சீரியலில் நடித்து வந்தார்.

இந்த தொடருக்கு பிறகு இவர் பலராலும் அறியப்பட்டவர் ஆகினார். இந்த தொடருக்கும் பின்னர் இவருக்கு சின்னத்திரையிலும் வாய்ப்பு தள்ளி சென்றதால், நடிப்பதை விட்டு முழுவதும் விலகினார். பின்னர் விஷ்வா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் நட்சத்திரா. இவர்களுக்கு இதழ் என்ற மகளும் உள்ளார். அடிக்கடி மகளின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார் நட்சத்திரா.

தற்போது மகள் இதழ் பிறந்து முதல் ஆண்டு ஆகியுள்ள நிலையில், பிறந்தநாளை குடும்பத்தினருடன் கோலாகலமாக கொண்டாடி உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் மகள் இதழுக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.