தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது. தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வரும் விஜய் பாக்ஸ் ஆபிசில் நம்பர் 1ஆக உள்ளார். தொடர்ந்து 100 கோடி வசூலை பெற்று உச்ச நட்சத்திரமாக விஜய் ஜொலித்து வருகிறார். இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகி உள்ளது.

இப்படத்தில் இவருடன் நடிகை சினேகா, மீனாட்சி சௌத்திரி, பிரபு தேவா, பிரசாந்த் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து உள்ளனர். அடுத்த மாதம் 5 ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். ஏற்கனவே இப்படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்து உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது படக்குழு. இப்படத்தின் மூன்றாவது பாடலை வெளியிட உள்ளது படக்குழு. நாளை மறுநாள் இப்படத்தின் மூன்றாவது பாடலை படக்குழு வெளியிட உள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் கொண்டாட்டத்தில் உள்ளனர். நாளை இப்பாடலின் கிளிம்ப்ஸ் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.