தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் பா ரஞ்சித். இவரின் இயக்கத்திற்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. அட்டகத்தி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து கபாலி, காலா என பெரிய படங்களை கொடுத்து இயக்குனராக சினிமாவில் வலம் வருகிறார். இவர் இயக்கிய சார்பட்டா பரம்பரை அமேசான் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பினை பெற்று இருந்தது.

தற்போது இவர் நடிகர் விக்ரமை வைத்து தங்கலான் படத்தை இயக்கி உள்ளார்.ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இப்படத்தினை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்தில் இவருடன் பார்வதி, மாளவிகா மோகனன் ஆகியோர் நடித்து உள்ளனர். இப்படம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது.

இந்நிலையில் படப்பிடிப்பில் நடிகை மாளவிகா மோகனனிடம் கடுமையாக நடந்துகொண்டதாக அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் பா ரஞ்சித் கூறியுள்ளார். மேலும் தான் கொடுத்த டார்ச்சரில் மாளவிகா படப்பிடிப்பில் அழுதே விட்டதாகவும் கூறி உள்ளார். ஸ்டண்ட் காட்சிகள் அவருக்கு சிரமாக இருந்ததால் இந்த பிரச்சனை ஏற்பட்டதாகவும், பின்னர் அவருக்கு முறையாக பயிற்சி அளிக்கப்பட்டதால் நடித்து அசத்திவிட்டதாக கூறியுள்ளார்.