இப்போ எல்லா பிரச்சனையும் சரி ஆகிவிட்டது..! விஜய் மில்டன் புகாரை சரி செய்து வைத்த பிரபல நடிகர்..!

இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மழை பிடிக்காத மனிதன். தனது எதார்த்தமான கதைக்களத்தால் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர் விஜய் மில்டன். இவர் இயக்கிய கோலிசோடா படம் இன்று வரை பலரும் விருப்பமான படமாக உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு உருவாகி இருக்கும் படம் என்பதால் இப்படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இப்போ எல்லா பிரச்சனையும் சரி ஆகிவிட்டது..! விஜய் மில்டன் புகாரை சரி செய்து வைத்த பிரபல நடிகர்..! 1

விளம்பரம்

படம் வெளியான முதல் நாளே முதல் காட்சியை பார்த்த இயக்குனர் விஜய் மில்டன் அதிர்ச்சியளிக்கும் புகாரை கொடுத்து இருந்தார். அவர் வெளியிட்டு இருந்த வீடியோவில் தன்னை கேட்காமல் தனது படத்தின் முழு கதையையும் முதல் ஒருநிமிடத்தில் விளக்கும் காட்சி கூடுதலாக வைக்கப்பட்டு இருப்பதாகவும், இதனால் தனது படம் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்கும் என விஜய் மில்டன் கூறி இருந்தார்.

இப்போ எல்லா பிரச்சனையும் சரி ஆகிவிட்டது..! விஜய் மில்டன் புகாரை சரி செய்து வைத்த பிரபல நடிகர்..! 3

விளம்பரம்

இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் தற்போது படத்தில் இடம்பெற்ற அந்த ஒரு நிமிட காட்சி நீக்கப்பட்டு விட்டதாக விஜய் மில்டன் கூறியுள்ளார். நடிகர் சரத்குமார் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இடையே பேசி சமாதானப்படுத்தி காட்சிகளை நீக்கி உள்ளார். இதற்கு விஜய் மில்டன் நன்றி தெரிவித்து உள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடையவை  வித்தியாசமான கதையில் சித்தார்த் நடித்துள்ள "டக்கர்" படத்தின் டீசர் வெளியானது.! தாறு மாறு டீசர்.!

 

விளம்பரம்

விளம்பரம்

Leave a Comment