விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் வீட்டுக்கு வீடு வாசப்படி. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. குடும்பத்தில் நடக்கும் எதார்த்தமான கதைகளை கொண்டு இயக்குனர் திரைக்கதையை வடிவமைத்து இருப்பதால் இந்த தொடருக்கு அதிக பார்வையாளர்கள் வந்து உள்ளனர். தொடரும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரின் புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. ப்ரோமோவில், ப்ரியாவை பார்க்க சரவணன் யாருக்கும் தெரியாமல் வீட்டிற்குள் எகிறி குதித்து வருகிறார். இதனை பல்லவி பார்த்துவிட்டு, ப்ரியாவை போட்டுக்கொடுக்க திருடன் உள்ளே வந்து ப்ரியா அறைக்குள் சென்றதாக கூறுகிறார். பல்லவி சத்தத்தை கேட்டு வந்த அனைவரும் திருடனை தேடுகின்றனர்.

ப்ரியா அறையில் ஒளிந்துகொண்டு இருந்த சரவணனை அனைவரின் முன்பும் காட்டிக்கொடுக்கிறார். உடனே சரவணனை அடித்து இழுத்து செல்கின்றனர். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.
Embed Video Credits : VIJAY TELEVISION