தமிழ் சினிமா கொண்டாடி வரும் நடிகர் தனுஷ். இவர் தற்போது பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரை சென்று இருக்கிறார். இவருக்கு அடுத்ததாக குபேரா படம் வெளியாக உள்ளது. இப்படத்தில் நாயகியாக ராஷ்மிக்கா நடித்து உள்ளார். இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகி இருக்கிறது. காரணம் இவர் இயக்கி நடித்த தனுஷின் 50வது படமான ராயன் படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை.

மேலும் தனுஷ் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகாரும் எழுந்து உள்ளது. அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் கே ராஜன், நடிகர் தனுஷ் குறித்து பேசியுள்ளார். அதில் ராயன் படம் 100கோடி வசூலை பெற்று இருப்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை எனவும், படத்தை பார்த்த ரசிகர்கள் ஆவரேஜ் என கூறி வருவதாக கே ராஜன் தெரிவித்து உள்ளார்.

தற்போது தனுஷ் மீதான அபிப்ராயம் ரசிகர்களிடம் குறைந்து இருப்பதாகவும் கூறி உள்ளார். இவரின் இந்த கருத்து ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தி இருக்கிறது. ராஜனின் இந்த கருத்துக்கு தனுஷ் ரசிகர்கள் பதிலடியும் கொடுத்து வருகின்றனர்.