விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. பல குடும்ப தலைவிகளை ரசிகர்களாக கொண்டு இந்த தொடர் வெற்றிகரமாக ஓடி வருகிறது. அப்பா மகனின் பாசத்தை அடிப்படையாக கொண்டு இயக்குனர் சிறந்த திரைக்கதையுடன் தொடரை இயக்கி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது தொடரின் புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. ப்ரோமோவில், கல்லாவில் இருந்து ஆயிரம் ரூபாய் குறைவதாக கதிரிடம் கேட்கிறார் பாண்டி. அப்பொழுது சரவணன் மயிலுடன் எடுத்த புகைப்படங்களை அப்பாவுக்கு அனுப்பி வைக்கிறார். அதனை பார்த்த பாண்டி , புகைப்படம் ரொம்ப அழகா இருக்கிறது என அனைவரின் முன்பும் பாராட்டுகிறார்.

மேலும் சென்னையில் இவ்வளவு பெரிய ஹோட்டலை கம்மி விலைக்கு பிடித்ததாக மயிலை பாண்டி பாராட்டுகிறார். அதனை கேட்டு அனைவரும் முழிக்கின்றனர். மீனா தங்கமயில் செய்த காரியத்தை நினைத்து மனதிற்குள் சிரிக்கிறார் இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.
Embed Video Credits : VIJAY TELEVISION