தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ். குறைந்த படங்களே தமிழ் சினிமாவில் இயக்கி இருந்தாலும் முன்னணி இயக்குனராக உருவெடுத்து உள்ளார். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக சினிமாவுக்குள் அறிமுகம் ஆகினார். இவர் இயக்கிய மாமன்னன் படம் மாபெரும் வெற்றி அடைந்தது. இவர் அடுத்ததாக நடிகர் துருவ் விக்ரம் வைத்து பைசன் படத்தினை இயக்கி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் வாழை. இப்படத்தில் திவ்யா துரைசாமி, நிகிலா விமல் மற்றும் பிரியங்கா நடித்து உள்ளனர். இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகி இருந்தது. இந்நிலையில் இப்படம் நேற்று தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. முன்னதாக படத்தினை பார்த்த சினிமா பிரபலங்கள் கண் கலங்கி மாரி செல்வராஜை கட்டிப்பிடித்து இருந்தனர்.

தற்போது இப்படத்தை பார்த்த ரசிகர்களும் கண் கலங்கி தான் திரையரங்கை விட்டு வெளியே வருகின்றனர். அந்தளவிற்கு இப்படம் ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வெளியான முதல் நாளே நல்ல விமர்சனத்தை மட்டும் பெறாமல், ரூ.1.5கோடி வரை வசூலை பெற்று இப்படம் சாதனை படைத்து இருக்கிறது.