பழம்பெரும் புகழ்பெற்ற மராட்டிய நடிகர் ஸ்ரீராம் லாகூ காலமானார்!!

பழம்பெரும் புகழ்பெற்ற மராட்டிய நடிகர் ஸ்ரீராம் லாகூ காலமானார்!! 1

இந்தி திரையுலகில் புகழ்பெற்ற நடிகரான ஸ்ரீராம் லாகூ (வயது 92). புனே நகரில் தனது வீட்டில் வசித்து வந்த அவர் நேற்றிரவு 8 மணியளவில் மாரடைப்பு காரணமாக காலமானார்.அவருடைய மகன் அமெரிக்காவில் உள்ள நிலையில், அவர் வந்தபிறகு இறுதி சடங்குகள் நடைபெறவுள்ளன என லாகூவின் மனைவி தீபா லாகூ அறிக்கை ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.

அறுவை சிகிச்சை நிபுணராக பயிற்சி பெற்ற லாகூ, நாடு விடுதலை அடைந்த பின்பு மராட்டியத்தில் திரையுலகம் வளர்ச்சி அடைவதற்காக முக்கிய பங்காற்றி உள்ளார். விஜய் தெண்டுல்கர், விஜய் மேத்தா மற்றும் அரவிந்த் தேஷ்பாண்டே உள்ளிட்டோருடன் இணைந்து அதற்கான பணிகளில் ஈடுபட்டார்.

விளம்பரம்

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் அவரது மறைவுக்கு டுவிட்டரில் இரங்கல் தெரிவித்து உள்ளார். இதேபோன்று மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்கரே மறைந்த லாகூவுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், மராட்டிய திரையுலகம் ‘நாட்சாம்ராட்’டை (நடிகர்களின் அரசர்) இழந்துள்ளது என தெரிவித்து உள்ளார்

விளம்பரம்

Leave a Comment