குடியுரிமை திருத்த மசோதா: மம்தா பேரணி

தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்காளம் முதலமைச்சர் மம்தா மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளார்.

புதிய குடியுரிமை சட்டம் அமலானதும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது. வடகிழக்கு மாகாணத்தில் தொடங்கிய போராட்டம் நகர்ந்து டெல்லிக்கு வந்தது. அங்கு மாணவர்கள் நடத்திய போராட்டம் காவல்துறையின் தடியடியில் முடிந்தது.

விளம்பரம்

இதனால் போராட்டம் தெற்கே வரை விரிந்து அரசியல் கட்சிகளும், மாணவர்கள் அமைப்பினரும் போராட தொடங்கி விட்டனர். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மற்றும் சென்னை பல்கலைக்கழக மாணவர்கள், அம்பேதகர் சட்ட கல்லூரி மாணவர்கள் என பலர் களத்தில் நிற்கிறார்கள்.

குடியுரிமை திருத்த மசோதா: மம்தா பேரணி 1
மம்தா பேரணி

தற்போது இந்த சட்டத்தினால் அதிகம் பாதிப்புகளாகும் மாநிலமாக கருதப்படும் மேற்கு வங்காளத்தின் களமும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அம்மாநிலத்தின் முதல்வர் மம்தா, இச்சட்டத்தை ஏற்கனவே எதிர்த்து பல பேரணிகளை நடத்தி இருந்தார். மேலும் போராட்டத்தின் வேகத்தை அதிகப்படுத்த ஒரே வாரத்தில் 3வது முறையாக பேரணியில் ஈடுபட்டுள்ளார். இன்று 3-வது முறையாக ஹவுரா மைதானத்தில் இருந்து கொல்கத்தா கடற்கரை வரை பேரணி சென்றார்.

விளம்பரம்
தொடர்புடையவை  கமலேஷ் திவாரி கொலைவழக்கு: கதைகளின் கதை!

அப்போது பேசிய அவர், “அமித் ஷா ஒரு கட்சியின் தலைவர் மட்டுமில்லை. நாட்டின் உள்துறை அமைச்சரும் கூட. நாட்டில் அமைதி நிலவ, புதிய சட்டங்களை திரும்ப பெற வேண்டும். இல்லையேல், அதனை எவ்வாறு அமல்படுத்துவீர்கள் என்பதை பாப்போம்” என கூறினார்.

அதேபோல், போராட்டக்காரர்கள் சில இரயில்களுக்கு தீவைத்ததால், வெகுதூரத்திற்கு செல்லும் இரயில்களை மத்திய அரசு இரத்து செய்தது குறித்து மம்தா பேசும் போது, இரயில்களை நிறுத்தியது தவறான செயல். இரயில்களை காக்கும் பொறுப்பு மாநில அரசுக்கு கிடையாது. அவர்களிடம் இரயில்வே பாதுகாப்பு படை இருக்கிறது. என்னால் உதவ மட்டுமே முடியும்” என கூறியுள்ளார்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment