தேசிய குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக தலைமையில் நடைபெறும் பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்கும் என அதன் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் திமுக தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் வரும் 23ஆம் தேதி சென்னை பேரணி நடைபெறுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின் பேரணியில் கலந்து கொள்வது குறித்து மக்கள் நீதி மய்யத்திற்கு அழைப்பு விடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் தன்னை தொடர்பு கொண்டு பேசியதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை பல்கலைக்கழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இரண்டாவது நாளாக போராடி வரும் மாணவர்களை சந்தித்த கமலஹாசன் திமுக தலைமையில் நடைபெறும் பேரணியில் மக்கள்நீதிமய்யம் கலந்து கொள்ளும் என கூறியுள்ளார்.