முடிந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி..! டைட்டிலை தட்டி தூக்கி சென்ற அந்த போட்டியாளர்..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதுவரை நான்கு சீசன்களை கடந்து வெற்றிகரமாக ஐந்தாவது சீசனில் ஒளிபரப்பாகி வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்களாக உள்ளனர். நாளுக்கு நாள் இந்த தொடரின் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டு செல்வதே இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சமாகும்.

முடிந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி..! டைட்டிலை தட்டி தூக்கி சென்ற அந்த போட்டியாளர்..! 1

விளம்பரம்

இந்த சீசனில் போட்டியாளர்களாக அக்ஷய் கமல், ஷாலின் ஜோயா, விடிவி கணேஷ், சூப்பர் சிங்கர் பூஜா, யுடியூபர் இர்பான்,திவ்யா துரை சாமி, தொகுப்பாளினி பிரியங்கா , இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா கலந்துகொண்டு உள்ளனர்.மேலும் இந்த சீசனில் கோமாளியாக அன்ஷிதா, ஷப்னம், கெமி ஆகியோர் களம் இறங்கி உள்ளனர். நடுவராக செப் தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோர் கலந்துகொண்டு உள்ளனர்.

முடிந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி..! டைட்டிலை தட்டி தூக்கி சென்ற அந்த போட்டியாளர்..! 3

விளம்பரம்

இந்நிலையில் தற்போது இந்நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நடந்து முடிந்து இருக்கிறது. இந்த இறுதிப்போட்டியில் தொகுப்பாளினி ப்ரியங்கா தான் வெற்றிபெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு ரசிகர்கள் காட்டமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விளம்பரம்

Leave a Comment