மணிமேகலை மற்றும் ப்ரியங்கா இடையேயான மோதல் தற்போதுமிகப்பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.பிரியங்கா, தன்னை தொகுப்பாளினியாக நிகழ்ச்சி நடத்தவிடாமல் தடுப்பதாக மணிமேகலை குற்றம்சாட்டி இருந்தார். இது மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. ரசிகர்கள் தொடர்ந்து பிரியங்காவை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இதுவரை பிரியங்கா தரப்பில் இருந்து இதற்கு விளக்கம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மணிமேகலைக்கு ஆதரவாக தற்போது பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். ப்ரியங்காவின் இந்த செயலால் மொத்த விஜய்டிவிக்கும் களங்கம் ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் பிக் பாஸ் போட்டியாளரும், நடிகையுமான ஐஸ்வர்யா இதுகுறித்து கருத்து தெரிவித்து உள்ளார். மணிமேகலை ,பிரியங்கா மீது கொடுத்து இருக்கும் புகாரை பார்த்து கடுப்பாகிய அவர் கருத்து பதிவிட்டுள்ளார்.

அந்த கருத்தில், மேடம் ப்ரியங்கா , நீங்கள் குக் வித் கோமாளியில் ஒரு போட்டியாளர் மட்டுமே, அந்த நிகழ்ச்சியில் நீங்கள் யார் என்பதை தெரிந்துகொண்டு வேலை செய்யுங்கள் என கூறி உள்ளார். ஐஸ்வர்யாவின் இந்த கருத்துக்கு பலத்த வரவேற்பு கிடைத்து இருக்கிறது. ரசிகர்கள் தொடர்ந்து மணிமேகலைக்கும் , இதுபோன்ற கருத்தை நெற்றி அடியாக சொன்ன ஐஸ்வர்யாவையும் பாராட்டி வருகின்றனர்.