ஜெயம் படத்தில் நடித்து சினிமாவுக்குள் நுழைந்து நல்ல வரவேற்பினை பெற்றவர் ஜெயம் ரவி. இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது. இவர் நடித்த தனி ஒருவன் படம் இவரின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இப்படத்தை தொடர்ந்து இவர் நடித்த மிருதன், டிக் டிக் டிக் படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் இருந்து பெற்று கொடுத்து இருக்கிறது.

இந்நிலையில் இவர் தனது காதல் மனைவி ஆர்த்தியை பிரிவதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தார். மேலும் விவாகரத்து கேட்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது கூறிய ஜெயம் ரவி, தான் விவாகரத்து கேட்பது ஆர்த்திக்கு முன்னாடியே தெரியும், எல்லாம் தெரிந்துவிட்டு தெரியாது என பொய் சொல்வதாக கூறியுள்ளார்.

மேலும் தன்னை தொடர்புகொள்ள முடியவில்லை என கூறியது பொய் எனவும், தான் தனது மகன்களுடன் தான் இருந்ததாகவும் அவர் தெரிவித்து உள்ளார். பாடகியுடன் தன்னை தொடர்பு படுத்தி பேசுவது அவர்களுக்கு தான் அசிங்கம்,அவர் ஒரு சைக்காலஜிஸ்ட் பலரையும் காப்பாற்றியுள்ளார். அவருடன் நான் ஒரு ஆன்மீக மையம் ஆரம்பிக்க உள்ளேன் அதை தகர்க்கவே இதுபோன்று பேசிவருவதாக ஜெயம் ரவி கூறியுள்ளார்.