விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த தொடருக்கென மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. முன்னணி ஹிட் தொடர்கள் வரிசையில் சிறகடிக்க ஆசை தொடரும் இணைந்து கலக்கி வருகிறது. நாளுக்கு நாள் தொடரின் சுவாரசியம் அதிகரித்து வருவதால் ரசிகர்கள் கூட்டமும் இந்த தொடருக்கு அதிகரித்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், மிரட்டல் கடிதம் அனுப்பியது முத்து என நினைத்து சண்டைக்கு வருகிறார் மனோஜ். இதை கேள்வி பட்ட விஜயா அவர்களை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். அந்த சமயத்தில் வந்த முத்து, மனோஜை அடிக்க செல்கிறார் மேலும் தான் மிரட்டல் கடிதம் அனுப்பவில்லை எனவும் கூறுகிறார்.

அப்போது மீனா, மனோஜிக்கு மிரட்டல் கடிதம் அனுப்பியது யாராக இருக்கும் என கூறவே அதனை கேட்டு ரோகிணி கடும் அதிர்ச்சி அடைகிறார். இறுதியாக அனைவரும் ரோகிணி அருகே வரவே, ரோகிணி மாட்டிவிடுவோமோ என்ற அச்சத்தில் முழிக்கிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது. ரசிகர்கள் ரோகிணி மாட்டிவிட்டார் என கருத்துக்களை கூறி வருகின்றனர்.
Embed Video Credits : VIJAY TELEVISION