விஜய் டிவியில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும், முன்னணி சீரியல் என்றால் அது முத்தழகு சீரியல் தான். இரண்டு மனைவியை வைத்திருக்கும் நபரின் வாழ்க்கையை கொண்டு இந்த தொடருக்கு கதை அமைக்கப்பட்டுள்ளது. பல ரசிகர்களையும் இந்த சீரியல் வெகுவாக கவர்ந்து இருக்கிறது. 2021ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த சீரியலில் ஷோபனா, வைஷாலி, ஆஷிஷ், லட்சுமி வாசுதேவன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

எத்தனை புதிய சீரியல்கள் வந்தாலும் தனது பாதையில் சரியாக பயணித்து வந்தது முத்தழகு சீரியல். நான்கு ஆண்டுகளாக வெற்றிநடைபோட்டு வந்த இந்த சீரியல் தற்போது முடிவுக்கு வந்து இருக்கிறது. இதனால் ரசிகர்கள் கடும் சோகத்தில் உள்ளனர். பல புதிய புதிய திருப்பங்களை கொண்டு சீரியலை வெற்றிகரமாக இயக்கி வந்த இயக்குனர் தற்போது கதையை முடித்து உள்ளார்.

இந்த தொடரில் நடித்து வரும் வைஷாலி, கடைசி நாள் முத்தழகு ஷூட்டிங் என கூறி வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு அவரது ரசிகர்கள் சோகமாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram