நிகழ்ச்சிகளுக்கு என்று பெயர் எடுத்த தொலைக்காட்சி என்றால் அது விஜய் டிவி தான். அந்தளவுக்கு தனக்கான ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்து வைத்து இருக்கிறது. ஆரம்பத்தில் தீபக் DD, சிவகார்த்திகேயன் பாவனா என தற்போது தொகுப்பாளர்கள் என்றாலே மாகாபா பிரியங்கா தான். தங்களது நகைச்சுவை திறமையால் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கி மக்களை மகிழ்விப்பதில் வல்லவர்கள்.

அதிலும் குறிப்பாக மாகாபாவிற்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இவர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் நாயகனாக சில படங்கள் நடித்து உள்ளார். இவருக்கு சினிமா கைகொடுக்கவில்லை. இதனால் திரும்பவும் இவர் சின்னத்திரையிலேயே நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் இவர் மீது தற்போது புகார் கிளம்பி உள்ளது.

அண்மையில் திருச்சியில் ரோட்டில் பிரம்மாண்டமாக ஹாப்பி ஸ்ட்ரீட் நடத்தப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியை மாகாபா கலந்து கொண்டு தொகுத்து வழங்கி இருந்தார்.இந்த நிகழ்ச்சி முறையான அனுமதி பெறாமல் நடத்தப்பட்டதாக கூறி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மற்றும் தொகுத்து வழங்கிய மாகாபா மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.