12 நகரங்களில் மாணவர்கள் போராட்டம்

குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து 11 முக்கிய தலைநகர்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

தேசிய குடியுரிமை திருத்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். டில்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்டதிலிருந்து இப்போராட்டம் நாடு முழுக்க உள்ள பல்கலைக்கழகங்களுக்கும், கல்லூரிகளுக்கும் பரவியது. மாணவர்கள் மட்டுமின்றி, பொதுமக்கள், அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் போன்ற பல்வேறு தரப்பினர் போராட்ட களத்திற்கு வந்துள்ளனர்.

விளம்பரம்
12 நகரங்களில் மாணவர்கள் போராட்டம் 1

டெல்லி மற்றும் பெங்களூரில் மாணவர்களின் போராட்டத்தை எதிர்கொள்ள முடியாத காவல்துறையினர் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் போராட்டத்தின் வலு குறியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போராட்டம் வேகம் எடுத்துள்ளது.

இதனை தொடர்ந்து, நாடு முழுவதும் சுமார் 12 தலைநகர்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லி, பெங்களூர், புவனேஸ்வர், சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத், லக்னவ், நாக்பூர், போபால், பாட்னா, ஆந்திரா, திருவனந்தபுரம் போன்ற பகுதிகளில் மக்கள் திரண்டுள்ளனர்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment