குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பயணித்து வந்த மணிமேகலை தற்போது தொகுப்பாளராக மாறி இருந்தார். நடைபெற்ற ஐந்தாவது சீசனில் நடுவராக வந்த பிரியங்கா, மணிமேகலையை வேலை செய்யவிடாமல் இடையூர் செய்து இருக்கிறார். இதனால் கடுப்பாகிய மணிமேகலை சண்டையிட்டு நிகழ்ச்சியை விட்டு வெளியேறி அனைவர்க்கும் அதிர்ச்சியை கொடுத்து உள்ளார். இது மிகப்பெரிய பேசுபொருளாக மாறியது.

ப்ரியங்காவுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த விஜய் டிவி நட்சத்திரங்களும், மணிமேகலைக்கு எதிராக மாறி உள்ளனர். மேலும் மணிமேகலை எதிராக நெகட்டிவ் கருத்துக்களை கூறி வருகின்றனர் ரசிகர்கள். தற்போது ப்ரியங்காவின் நெருங்கிய நண்பரான மாகாபா, பிரியங்கா குறித்து பேசியுள்ளார். அதில் பிரியங்கா உடன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் அவர் எந்த வேலையையும் நம்மளை செய்யவிடமாட்டார் என்றும்.

சும்மா அவருடன் நின்று கொண்டு சம்பளம் வாங்கி வரலாம், அந்தளவுக்கு ரொம்ப அறிவான பெண், எதை கொடுத்தாலும் பேசுகிற தன்மை அவளுக்கு ஆண்டவன் கொடுத்து இருக்குற வரம் என கூறி உள்ளார். மணிமேகலை நெகடிவாக கூறிய விஷயத்தையே பிரியங்காவை பார்த்து மாகாபா பாசிட்டிவ் ஆக கூறி இருக்கிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.