பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆண்கள் பெண்கள் என பிரிக்கப்பட்டு போட்டியாளர்கள் மும்முரமாக விளையாடி வருகின்றனர். நாளுக்கு நாள் நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுவரை நடந்த 7 சீசன்களில் இல்லாத அளவுக்கு 8வது சீசனில் முதல் நாளே போட்டியாளர்கள் எலிமினேஷன் ஆகி சென்று உள்ளனர்.

தற்போது இந்த 8வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். நேற்று முதல் இந்த நிகழ்ச்சி ஆரம்பமாகி இருக்கிறது. போட்டியாளர்களாக தீபக், அர்னவ்,ரஞ்சித், ரவீந்தர் சந்திரசேகர், கானா ஜெப்ரி,விஜே விஷால், நான் முத்துக்குமரன்,சத்யா , அருண் பிரசாத், சௌந்தர்யா நஞ்சுந்தன்,சாச்சனா,அன்ஷிதா, சுனிதா , ஜாக்லின்,ஆர்ஜே ஆனந்தி, பவித்ரா ஜனனி, தர்ஷா குப்தா என 18 பேர் கலந்துகொண்டு உள்ளனர்.

இந்த சீசனில் நேற்று ரஞ்சித் ஆண்கள் அணி உடன் சேர்ந்து ரவிந்தருடன் சண்டையிடுவது போல பிராங்க் செய்து இருந்தார். அதனால் பயந்துபோன பெண்களிடம் மன்னிப்பு கேட்கும் பொழுது, சவுந்தர்யாவுக்கு முத்தம் கொடுத்து இருந்தார் ரஞ்சித். இது இணையத்தில் பேசு பொருளாக மாறி இருக்கும் நிலையில்,நெற்றியில் கொடுக்கும் முத்தம் அழகானது எனவும்,சகோதரன் அல்லது அப்பா முத்தம் கொடுக்கலாம் என கூறி உள்ளார்.