நீண்டகால சமூக பிரச்சினை குறித்து ராஜ்கிரண் கருத்து!

நாட்டின் தற்போதைய சிக்கல்களை பற்றியும், நீண்ட காலமாக நிலவி வரும் சமூக சிக்கல்களை பற்றியும் தமிழ் நடிகரான ராஜ்கிரண் தான் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் ராஜ் கிரண், இவர் கூலி தொழிலாளியாக வாழ்க்கையை தொடங்கி விநியோஸ்தகர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என சினிமாவை ஒரு சுற்று சுற்றியவர். தொடர்ந்து நடிப்பில் ஈடுபட்டு வருவதை போலவே, தனது முகநூல் பக்கத்தில் அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த விடயங்களை குறித்து பேசி வருகிறார்.

விளம்பரம்

இதனைத்தொடர்ந்து, தற்போது தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மேலும், போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தவும், போராட்டம் தீவிரமடையாமல் இருக்கவும் பல்வேறு அடக்கு முறைகளை மத்திய அரசும், பாஜக ஆளும் மாநில அரசும் மேற்கொண்டு வருகிறது.

நீண்டகால சமூக பிரச்சினை குறித்து ராஜ்கிரண் கருத்து! 1
ராஜ்கிரண்

இதுதொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ராஜ் கிரண், நம் இந்திய தேசத்தில்,
இஸ்லாமியர்கள் 20 சதவிகிதம்…
நம் இரத்த உறவுகளான
இந்துக்கள், கிருஸ்தவர்கள், மற்றும்
அனைத்து மார்க்கத்தினரும்
மொத்தமாகச்சேர்ந்து 77 சதவிகிதம்…

“இந்துத்துவவாதிகள்” என்று தங்களை
சொல்லிக்கொள்வோர்,
“அங்கீகரித்துக்கொள்ளும்
இந்துக்கள்” என்போர், வெறும் 3 சதவிகிதம்…

அந்த 3 சதவிகிதத்திலும்,
97 சதவிகித மக்களைப்போன்ற
குணம் கொண்டோர் 2.5 சதவிகிதம்…
மீதமுள்ள 0.5 சதவிகிதப்பேர்கள் தான்,
பொதுப்புத்திக்கு மாறான
வக்கிரபுத்தி கொண்டோர்…

இந்த 0.5 சதவிகிதப்பேர்கள் தான்,
இந்திய இறையாண்மைக்கும்,
இந்திய ஒற்றுமைக்கும்,
இந்திய தேச நலனுக்கும் எதிராகவே
எப்பொழுதும் சிந்திப்பவர்கள்…
இவர்களை எப்படிக்கையாண்டால்,
எல்லாம் சரியாகும்…
ஆழ்ந்து யோசிக்க வேண்டிய விசயம்…
இவ்வாறு தெரிவித்துள்ளார்.

விளம்பரம்
தொடர்புடையவை  பொது இடத்தில் நடுவிரலைக் காட்டினால் ஜெயில்!!

அதாவது நீண்ட காலமாக பிராமண அல்லாத மக்களை பிராமணர்கள் சமூக ரீதியாக சுரண்டி வருகிறார்கள். இன்று அவர்களே ஆட்சியிலும், இந்துத்துவத்தை பரப்புவதிலும் தீவிரப்படுத்தி வருகிறார்கள். இதனை மையப்படுத்தி தான் ராஜ் கிரண் இவ்வாறு கூறியிருக்கிறார்.

விளம்பரம்

Leave a Comment