ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் முன்னணி நிகழ்ச்சிதான் பிக் பாஸ். பலரையும் சினிமாவில் நாயகனாக இந்த நிகழ்ச்சி உயர்த்தி இருக்கிறது. இதுவே இந்த நிகழ்ச்சியின் மிகப்பெரிய சாதனையாகும். இங்கு வந்தால் ஜெயித்து விடலாம் என்பதை தாண்டி பிரபலம் ஆகி விடலாம் என்று தான் போட்டியாளர்கள் வீட்டிற்குள் வருகின்றனர். தற்போது பலரும் எதிர்பார்த்த 8வது சீசன் பிரம்மாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

போட்டியாளர்களாக தீபக், அர்னவ்,ரஞ்சித், ரவீந்தர் சந்திரசேகர், கானா ஜெப்ரி,விஜே விஷால், நான் முத்துக்குமரன்,சத்யா , அருண் பிரசாத், சௌந்தர்யா நஞ்சுந்தன்,சாச்சனா,அன்ஷிதா, சுனிதா , ஜாக்லின்,ஆர்ஜே ஆனந்தி, பவித்ரா ஜனனி, தர்ஷா குப்தா என 18 பேர் கலந்துகொண்டு உள்ளனர்.இந்த நிகழ்ச்சியில் புதுமுகமாக வந்து கவனம் பெற்று இருப்பவர் தான் ஜெப்ரி. கானா பாடகரான இவருக்கு தொடர்ந்து ஆதரவுகள் பெருகி வருகிறது.

வாரம் வாரம் நாமினேஷனுக்கு வந்தாலும், தமிழ் கிளிட்ஸ் நிறுவனத்தின் வாக்கு எடுப்பில் முதலிடத்தில் அதிக வாக்குகளை பெற்று இருக்கிறார். இந்த சீசனில் இவருக்கு மகத்தான ஆதரவு மக்களிடம் இருப்பதால் இவர் வெற்றிபெற அதிக வாய்ப்புகள் உள்ளது. இன்னும் ஜெப்ரி தனது விளையாட்டில் கவனம் செலுத்தினால் பிக் பாஸ் டைட்டில் வின்னர் அவர்தான் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.