கோதாவரி காவிரி நதிநீர் இணைப்புத் திட்டத்தின் கீழ் 350 டிஎம்சி தண்ணீர் பங்கீட்டு தர வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை.
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உருவாக்கம் கோதாவரி ஆற்றின் நீர் உபரியாக கடலில் கலக்கிறது. இந்த உபரி நீரை காவிரியோடு இணைக்கும் பட்சத்தில், தமிழகத்தின் நீர் பற்றாக்குறையை சமாளிக்க முடியும் என மத்திய அரசு கருதுகிறது.

இதற்காக கோதாவரி – கிருஷ்ணா -பெண்ணையாறு, பாலாறு – காவிரி – வைகை – குண்டாறு ஆகியவற்றை 60 ஆயிரம் கோடி ரூபாயில் இணைக்க வரைவு திட்ட அறிக்கையை தயாரித்த தேசிய நீர் மேம்பாட்டு முகமை அதனை ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களுக்கு அனுப்பி கருத்து கேட்டிருந்தது.
இதற்கு பதில் அளித்துள்ள தமிழக அரசு கோதவரி நீரை கல்லணையோடு இணைப்பதற்கு பதிலாக, மாயனூரில் உள்ள கட்டளை கதவணையில் இணைக்க வேண்டும் எனவும் அவ்வாறு செய்தால்தான் வைகை ஆற்றுக்கு இந்நீரை திருப்பிவிட முடியுமெனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்திற்கு வழங்க திட்டமிட்டுள்ள 83 டிஎம்சி நீரை 300 டிஎம்சி நீராக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பபட்டுள்ளது.