மருத்துவமனைகளில் கண்ணீர் புகை குண்டு வீச்சு!

மங்களூரில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் மருத்துவமணையில் கண்ணீர் புகைக்குண்டு வீசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவமனைகளில் கண்ணீர் புகை குண்டு வீச்சு! 1

தேசிய குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் மங்களூர் பகுதியில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததால், கண்ணீர் வெடிகுண்டு, துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தப்பட்டன.

விளம்பரம்

நேற்று நடந்த துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழந்தனர். அவர்கள் உடலை மருத்துவமனைக்கு கொண்ட சென்ற காவல்துறையினர், இறந்தவர்களின் உடலை மருத்துவமனையில் வைத்துக்கொள்ளுமாறு கூறியுள்ளனர். அதற்குள் இருவர் இறந்த செய்தி மற்ற போராட்டக்காரர்களுக்கு தெரிய வரவே, மருத்துவமனைக்கு முன் குவிந்தனர். இதனால் மீண்டும் இரு தரப்புகளிடையே கலவரம் ஏற்பட்டது.

இதனால், காவல்துறையினர் தடியடி செய்து கூட்டத்தை கலைக்க முயன்ற போது, இரண்டு கண்ணீர் புகை குண்டுகளை விசியுள்ளனர். ஒரு குண்டு வாகன நிறுத்துமிடத்திலும், மற்றொன்று மருத்துவமனையின் வரவேற்பு பகுதியிலும் விழுந்துள்ளது. இதுமட்டுமின்றி, மருத்துவமனைக்கு புகுந்த காவல் துறையினர், அங்கிருந்த நோயாளிகளின் உறவினர்களை போராட்டக்காரர்கள் என நினைத்து அறையை விட்டு வெளியே தள்ளி அராஜகமான செயல்களில் ஈடுபட்டுள்ளன. இந்த சம்பவம் நாடுமுழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்
தொடர்புடையவை  48 சிறுபான்மை உறுப்பினர்கள் பாஜகவிலிருந்து விலகல்!

பாஜக ஆளும் மாநிலங்களில் போராட்டக்காரர்களுக்கு எதிராக பல அடக்குமுறைகளை கட்டவிழ்க்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

Leave a Comment