அரசியல் அமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றுங்கள்: டெல்லியில் குவியும் மக்கள்!

தேசிய குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களில் துப்பாக்கி சூடு போன்ற அடக்கு முறைகளை அரசு நிறுவனங்கள் பயன்படுத்தி வருவதால், போராட்டம் தீவிரமடைந்து, நாட்டின் பல மூளைக்கும் பரவி வருகிறது. இதன் காரணமாக தலைநகர் டெல்லி முடங்கியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர்கள் டி.ராஜா, சீதாராம் யெச்சுரி, நிலோட்பால் பாசு, பிருந்தா காரத், அஜய் மேக்கன், சந்தீப் தீட்சித் மற்றும் ஆர்வலர்கள் யோகேந்திர யாதவ், உமர் காலித் போன்றோர்களை தடுத்து நிறுத்தியுள்ளது காவல்துறை. இந்நிலையில் டெல்லியின் ஜந்தர் மந்தில் ஏராளமானோர் தடையை மீறி கூடி வருகிறார்கள்.

விளம்பரம்
அரசியல் அமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றுங்கள்: டெல்லியில் குவியும் மக்கள்! 1
பீம் ஆர்மி தலைமையிலான பேரணி

தற்போது பீம் ஆர்மி தலைமையில் ஜும்மா மசூதியில் இருந்து ஜந்தர் மந்தர் நோக்கி பேரணி தொடங்கியது. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், பேரணி நகர்ந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.’அரசியல் அமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றுங்கள்‘ என்று எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியும், மூவர்ணக் கொடிகளை கையில் ஏந்தியும், ஏராளமானோர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விளம்பரம்

Leave a Comment