ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அறிமுகமாகியவர் நடிகர் ஜெயம் ரவி.இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இவர் அண்ணன் ஜெயம் ராஜா இயக்கத்தில் வெளியான தனி ஒருவன் படம் ஜெயம் ரவியின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.இப்படத்திற்கு பின்னர் தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து ஜெயம் ரவி நடித்து வருகிறார். இவருக்கு அடுத்ததாக தனி ஒருவன் 2 படம் உருவாக உள்ளது. இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியாகி இருந்தது.

அண்மையில் இவர் மனைவி ஆர்த்தி , ரவி உடன் எடுத்த அணைத்து புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கி உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே விவாகரத்து ஆகிவிட்டதாக செய்திகள் உலாவர தொடங்கியது. இந்நிலையில் இதுகுறித்து பலதரப்பட்ட தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், தற்போது ஜெயம் ரவியே விவகாரத்தை அதிகாரபூர்வமாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து இருந்தார்.

ஜெயம் ரவி விவாகரத்து வழக்கு கோர்ட்டில் உள்ள நிலையில், இருவரும் முதலில் சமரச பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு உள்ளார். ஆனால் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி தனக்கு உடல்நிலை சரி இல்லை என்பதால் சமரசப்பேச்சுவார்த்தைக்கு வர முடியாது எனவும், அதனை தள்ளி வைக்க வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்து உள்ளார்.