காப்பான் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – நாளை விசாரணை.!

காப்பான் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – நாளை விசாரணை.! 1

காப்பான் திரைப்படத்தினை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படவிருக்கிறது.

இயக்குனர் கே. வி. ஆனந்த் இயக்கத்தில் உருவான காப்பான் திரைப்படத்தில் நடிகர் சூர்யா, நடிகர் மோகன்லால், நடிகர் ஆர்யா ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வருகிற செப்டம்பர் 20ம் தேதியன்று வெளியாகயுள்ளது.

விளம்பரம்

இந்த நிலையில் குரோம்பேட்டையைச் சேர்ந்த ஜான் சார்லஸ் என்பவர் இந்த காப்பான் திரைப்படத்தின் கதை அவருடையதென்றும் தன்னிடம் கேட்கப்பட்ட கதை தான் காப்பான் திரைப்படமாக எடுத்துள்ளதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் 2016ம் ஆண்டில் “சரவெடி” என்ற தலைப்பில் இயக்குனர் கே.வி.ஆனந்திடம் கதை கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அக்கதையை படமாக்கும்போது வாய்ப்பு தருவதாக கூறி தற்போது காப்பான் திரைப்படத்தை இயக்கியுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து காப்பான் படத்தின் இயக்குனர் கே. வி. ஆனந்து மற்றும் படத்தயாரிப்பு நிறுவனமான லைக்கா பதில் மனு தாக்கல் செய்தனர். அதில் வழக்கு தொடர்ந்த நபரை தெரியாது என்றும் வீன் விளம்பரத்திற்காக வழக்கு தொடர்ந்திருக்கிறார் என்றும் எழுதப்பட்டிருந்தது.

விளம்பரம்
தொடர்புடையவை  SK21 படத்திற்க்காக வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் சிவகார்த்திகேயன்.! படக்குழு பகிர்ந்த வீடியோ.!

இந்த பதில் மனுவை ஏற்று கடந்த 9ம் தேதியன்று தனி நீதிபதி சதீஷ்குமார் படத்திற்கு எதிராக தொடக்கப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்துள்ளார். ஆனால் தன் தரப்பு விளக்கத்தை கேட்காமல் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாகக் கூறிப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்து உள்ளார்.

இதையடுத்து இந்த வழக்கு நீதிபதி மணிக்குமார் அமர்வு முன்பு நாளை விசாரணைக்கு வர உள்ளது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment