SK21 படத்திற்க்காக வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் சிவகார்த்திகேயன்.! படக்குழு பகிர்ந்த வீடியோ.!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன், தற்போது தனது 21வது படத்திற்காக தீவிரமாக உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக மாற்றி இருக்கிறார். அந்த வீடியோவை தற்போது படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கி தற்போது தமிழின் முன்னணி நடிகராக இருந்து வருகிறார் சிவகார்த்திகேயன். இவர் தற்போது 20 படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ‘அயலான்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

SK21 படத்திற்க்காக வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் சிவகார்த்திகேயன்.! படக்குழு பகிர்ந்த வீடியோ.! 1
தொடர்ந்து தனது 21வது படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்க இருக்கிறார். இந்த கூட்டணி முதல் முறையாக இணைய இருக்கிறது. இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி என்பவர் எழுதி, இயக்க இருக்கிறார். கமலஹாசனின் ‘ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம்’ இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. மேலும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த படத்தில் இருந்து ஒவ்வொரு அப்டேட் ஆக வெளியாகி வருகிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  "மனைவியின் பெயர் வைத்தாரா ஜெயமோகன்....கேள்வி கேட்ட மாறன்....வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்"!!

SK21 படத்திற்க்காக வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் சிவகார்த்திகேயன்.! படக்குழு பகிர்ந்த வீடியோ.! 3

அந்த வகையில் படத்திற்காக சிவகார்த்திகேயன் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். இந்த வீடியோவிற்கு தற்போது லைக்குகளும் குவிந்து வருகிறது. நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Raaj Kamal Films International

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment