கோட்டையை பிடித்ததா அல்லது கோட்டை விட்டதா…! GOAT படத்தின் திரை விமர்சனம் ..!

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் கோட். இப்படத்தில் இவருடன் நடிகை சினேகா,மீனாட்சி,மோகன், பிரபுதேவா, பிரசாந்த் ஆகியோர் நடித்து உள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.

கோட்டையை பிடித்ததா அல்லது கோட்டை விட்டதா...! GOAT படத்தின் திரை விமர்சனம் ..! 1

விளம்பரம்

படத்தின் கதை

சிறப்பு தீவிரவாதி தடுப்பு பிரிவின் தலைவராக வருபவர் தான் காந்தி என்கிற விஜய். இவர் தனது நண்பர்களான பிரசாந்த் , பிரபுதேவா மற்றும் அஜ்மல் உடன் இணைந்து தீவிரவாதிகள் சூழ்ச்சிகளை தடுத்து வருகிறார். அப்படி இருக்க ஒருநாள் குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு விடுமுறைக்கு செல்லும்பொழுது அங்கு ஏற்பட்ட ஒரு சம்பவத்தால் தனது மகனை இழக்கிறார். பின்னர் தனது வேலையை விட்டே சென்ற விஜய்க்கு மீண்டும் ஒரு அசைன்மென்ட் வருகிறது. உடனடியாக மாஸ்கோ செல்லும் விஜய்க்கு, அவர் உருவத்திலேயே அங்கு பிரச்சனை காத்து இருக்கிறது. அதனை எப்படி சமாளித்தார் என்பதே படத்தின் மீதி கதை.

விளம்பரம்
தொடர்புடையவை  யோவ் உக்காருயா போய்.! சென்றாயனுக்கும் கே ராஜனுக்கும் மேடையில் நடந்த வாக்குவாதம்

கோட்டையை பிடித்ததா அல்லது கோட்டை விட்டதா...! GOAT படத்தின் திரை விமர்சனம் ..! 3

படத்தின் விமர்சனம்

விளம்பரம்

மொத்த படத்தையும் நடிகர் விஜய் தோளில் தாங்கி இருப்பதற்கு கிளாப்ஸ்கள். இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார் நடிகர் விஜய்.இளம் விஜய் படத்தில் செய்யும் சேட்டைகள் அனைவரையும் ரசிக்க வைக்கும் வண்ணம் உள்ளது. காமெடி காட்சிகளில் விஜயும் தனது பங்கை கொடுத்து இருக்கிறார். அவருடன் நடித்த பிரபுதேவா , பிரசாந்த் மற்றும் அஜ்மல் தங்களது சிறப்பான நடிப்பை வெளிகாண்பித்துள்ளார் . வில்லனாக வரும் மோகன் எதிர்பாரத தனது இன்னொரு பக்கத்தை காண்பித்து உள்ளார். அதுபோல நடிகைகளும் தங்களது சிறந்த நடிப்புகளை வெளிப்படுத்தி உள்ளனர். பின்னணி இசை படத்திற்கு பலமாக அமைந்து இருந்தாலும், தேவையற்ற நேரத்தில் பாடல்கள் வருவது எரிச்சலடைய செய்து இருக்கிறது.டீ ஏஜிங் சில இடங்களில் அடி வாங்கி இருப்பதை சரி செய்து இருந்தால் படம் இன்னும் வேறேலெவெலில் இருந்திருக்கும். மற்றபடி படத்தை குறைசொல்வதற்கு என்றும் எதுவும் இல்லை.

விளம்பரம்

Leave a Comment