நாம் அன்றாட வாழ்க்கையில் பல அழகு சாதன பொருட்களை பயன்படுத்தி வருகிறோம். ஆனால் அவற்றில் எத்தனை வகையான நச்சு பொருட்களை பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்து நாம் அறிந்து கொள்வது கிடையாது.
அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவதால், பெண்களின் ஹார்மோனில் பல எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதாக பல ஆராய்ச்சிகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய எதிர் விளைவுகள் இருதய நோய், மற்றும் மார்பக புற்றுநோய் ஆகியவற்றை ஏற்படுத்த கூடியதாகும்.
இந்த ஆராய்ச்சி 18 வயது முதல் 44 வயது வரையிலான 143 பெண்களிடம் எடுக்கப்பட்டது. சுமார் 509 சிறுநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வு செய்ததில், பராபன்ஸ் மற்றும் பென்சோபீனோன்ஸ் போன்ற இராசனங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
அழகு சாதன பொருட்களில் பயன்படுத்தப்படும் இராசயனங்கள், பாலுற்பத்தியில் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை ஆராய்ச்சி செய்வதே இந்த ஆய்வின் நோக்கமாகும். மற்றோரு சுவாரசியமான தகவலும் இந்த ஆராய்ச்சில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில இரசாயன வகைகள் பாலுற்பதியை குறைப்பதாகவும், சில இரசாயனங்கள் அவற்றை ஆதிக்கப்படுத்துவதாகும் இருக்கிறது.

மேலும், பராபன்ஸ் என்ற இராசயம் கருமுட்டையின் அளவை அதிகரிக்கக்கூடும் என்றும் இது மார்பக புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமுடிகளுக்கு பயன்படுத்தப்படும் ஜெல் போன்ற 18 வகையான பொருட்களில் அளவுக்கு அதிகமான இரசாயனங்கள் இருப்பதும் அவை தோலில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பொருட்களில் உள்ள “பராபென்ஸ் மற்றும் பித்தலேட்ஸ்” இராசாயணங்கள் ஹார்மோன்களின் சமநிலையை சீர்குலைக்கின்றன என அந்த ஆராய்ச்சி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நானைல்பினால் எனப்படும் ஒரு வகையான இரசாயனம் மார்பக புற்றுநோய் மற்றும் உடல் பருமன் அதிகரிப்பு போன்ற ஆபத்தைக் கொண்டுள்ளது என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வுகள், பொது பராமரிப்பு மற்றும் அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படும் இரசாயனங்களின் ஆபத்தினை அறிந்து கொள்வதற்கு முக்கியத்துவமாகும்.