10ம் , 12ம் அரசு பள்ளி மாணவர்களின் தேர்வு கட்டணத்தை டெல்லி அரசாங்கம் செலுத்த முடிவு!!

10ம் , 12ம் அரசு பள்ளி மாணவர்களின் தேர்வு கட்டணத்தை டெல்லி அரசாங்கம் செலுத்த முடிவு!! 1

டெல்லியில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் தேர்வு கட்டணத்தை செலுத்த டெல்லி அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.

டெல்லி அமைச்சரவை கடந்த புதன்கிழமை (செப்டம்பர் 18) அன்று 2020ஆம் ஆண்டு முதல் அரசுப் பள்ளிகளில் பயிலும் சுமார் 3.14 லட்சம் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சிபிஎஸ்இ தேர்வுக் கட்டணம் செலுத்தும் திட்டத்திற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளது.

விளம்பரம்

பத்ராச்சார் வித்யாலயங்களைத் தவிர அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் சுமார் 3.14 லட்சம் மாணவர்கள் இந்த முயற்சியால் பயனடைவார்கள். இந்த திட்டத்திற்கு அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.57.80 கோடி செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லியின் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அமைச்சரவை, கல்வித்துறையின் முன்மொழிவுக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளனர். இதில் கல்வி உதவி இயக்குநரகத்தின் (டிஒஇ) அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மற்றும் தொலைதூரக் கல்விப் பள்ளிகளின் (பட்ராச்சார் வித்யாலயாக்கள்) மாணவர்கள் இதில் அடங்குவர்.

விளம்பரம்

இந்திய நாட்டின் தேசிய தலைநகரமான டெல்லியில் , அரசு பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு ஏற்பாட்டின் மூலம் அவர்கள் ரூ .50 மட்டுமே செலுத்தினர், மீதமுள்ள தொகையை டெல்லி அரசு மானியமாக செலுத்தியது.

தொடர்புடையவை  +1, +2 வகுப்பு மாணவர்களும் இனி 500 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் எழுதலாம்..!

“இந்த தொகை நேரடியாக சிபிஎஸ்இக்கு செலுத்தப்படும், மேலும் மாணவர்கள் எந்தவிதமான சுமையையும் எடுக்க வேண்டியதில்லை அல்லது திருப்பிச் செலுத்துவதற்காக காத்திருக்க வேண்டியதில்லை”

விளம்பரம்

என்று ஒரு அதிகாரி கூறினார்.

விளம்பரம்

Leave a Comment