
இந்திய மாநிலமான உத்தரபிரதேச மாநிலத்தின் அரசு இடைநிலைப் பள்ளிக் கல்விக்கான தேர்வு முறையை மேம்படுத்தவும், கல்வியை ஊழல் மற்றும் அலட்சியம் ஆகியவற்றிலிருந்து விடுவிக்கவும் செயற்கை நுண்ணறிவு ஏ.ஐ.–போட்களைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆரம்பகால குழந்தை பருவ பராமரிப்பு கல்வி (ஈசிசிஇ) ஆகியவற்றை பாடத்திட்டத்தில் திறன் பாடங்களாக சேர்க்க முடிவு செய்துள்ளது, இதைத் தொடர்ந்து உத்தரபிரதேச அரசும் அத்திட்டத்தை பின்பற்றுவதற்குத் திட்டமிட்டுள்ளது.
மழலையர் பள்ளி முதல் 12 ஆம் வகுப்பு வரை மேகக்கணி மூலம் இயங்கும் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டங்களை நடத்த சிபிஎஸ்இ ஏற்கனவே மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்த திட்டம் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள பள்ளிகளில் ஏ.ஐ–போட்கள் நிறுவப்பட்டால் அது தேர்வுக்கூட கண்காளிப்பாளர்களையும் மாணவர்களையும் கண்காணிப்பதோடு ஒரு தனிப்பட்ட மாணவரின் செயல்திறனை அவரது முந்தைய தரங்கள், பங்கேற்பு மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் கண்காணிக்கவும் உதவும்.
இடைநிலைக் கல்வித் துறையில் உள்ள மூத்த அதிகாரி ஒருவர்
“விஷயங்கள் இன்னும் திட்டமிடல் நிலையில் உள்ளன, மேலும் 2020 வாரியத் தேர்வுகளுக்கான திட்டத்தை செயல்படுத்துவதை உறுதிப்படுத்த முயற்சிக்கிறோம்”
என்று தெரிவித்துள்ளார். மேலும் இடைநிலைக் கல்வித் துறையை வைத்திருக்கும் மாநில துணை முதல்வர் தினேஷ் சர்மா அவர்கள் இந்த திட்டத்தின் விவரங்களைப் பற்றி கூற மறுத்துவிட்டார்.
“நாங்கள் தகுந்த நேரத்தில். விஷயங்களை வெளியிடுவோம்”
என்றும் கூறியுள்ளார்.