+1, +2 வகுப்பு மாணவர்களும் இனி 500 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் எழுதலாம்..!

+1, +2 வகுப்பு மாணவர்களும் இனி 500 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் எழுதலாம்..! 1

+1, +2 வகுப்புகளில் படி‌க்கு‌ம் மாணவ‌ர்க‌ள் 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதும் புதிய தேர்வு நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிக்கை மற்றும் அரசாணையும் வெளியாகி உள்ளது.

இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்னவென்றால், மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் இயற்பியல், வேதியியல், உயிரியியல் பாடங்களை தேர்வு செய்து படிக்கலாம்.அத்துடன் சேர்த்து மொழி பாடங்களுடன் மொத்தம் 500 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் எழுதலாம் எனவும், அதே போல பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் இயற்பியல், வேதியியல், கணிதம் பாடங்களை தேர்வு செய்து படிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு இல்லாமல் 600 மதிப்பெண்களுக்கே தேர்வு எழுத விரும்புவர்கள் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியியல் பாடங்களை படிக்க வேண்டும். புதிய நடைமுறை வரும் 2020-2021-ஆம்  கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

தற்போது +1, +2 வகுப்புகளில் 600 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதும் நடைமுறையே கட்டாயமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

Leave a Comment