கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிர்ப்பு! திருவனந்தபுரத்தில் நடந்த பரபரப்பு!!

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிர்ப்பு! திருவனந்தபுரத்தில் நடந்த பரபரப்பு!! 1

கர்நாடகத்தின் முதல்வர் எடியூரப்பா, திருவனந்தபுரத்திற்கு பத்மநாப சுவாமி கோவிலுக்கு வழிபடுவதற்காக நேற்று இரவு பெங்களூருவில் இருந்து திருவனந்தபுரத்திற்கு விமானம் மூலம் வந்தடைந்தார். விமான நிலையத்தில், எடியூரப்பாவுக்கு கேரள இளைஞர் காங்கிரசார் கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

மங்களூருவில் நடந்த வன்முறை தொடர்பான செய்திகளை சேகரிக்கச் சென்ற கேரள பத்திரிகையாளர்கள் 7 பேரை அம்மாநில போலீஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், எடியூரப்பாவுக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டி இளைஞர் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, கறுப்புக்கொடி காட்டிய காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்யப்பட்டனர் .

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment