காவல் நிலையத்தில் நடக்கும் காமெடி படமாகிறது!!

காவல் நிலையத்தில் நடக்கும் காமெடி படமாகிறது!! 1

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திரைக்கு வந்த ஒரு கிடாயின் கருணை மனு என்ற படத்தை இயக்கியவர், சுரேஷ் சங்கையா. இந்த படத்தில் விதார்த், ரவீணா ஆகியோர் நடித்தனர். தற்போது, இந்த படத்தின் இயக்குனர் இயக்கி வரும் புதிய படம் ஒன்றில் பிரேம்ஜி ஹீரோவாக நடித்து வருகிறார். கிராமத்துக்கு அருகிலுள்ள காவல் நிலையம் மற்றும் நீதிமன்றத்தில் நடக்கும் காமெடி சம்பவங்களை மையமாக வைத்து படம் உருவாகிறது.

மேலும் இப்படத்தில் ஸ்வயம் சித்தா, ரேஷ்மா, கு.ஞானசம்பந்தம், கே.ஜி.மோகன், ஹலோ கந்தசாமி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் லட்சுமி பாட்டி நடிக்கிறார். ஆர்.வி.சரண் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தை சமீர் பரத் ராம் தயாரிக்கிறார்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment