வானியல் நிகழ்வான சூரிய கிரகணம்! சற்றே தொடங்கியது!!

வானியல் நிகழ்வான சூரிய கிரகணம்! சற்றே தொடங்கியது!! 1

இந்த ஆண்டில் நடைபெறும் அறிய நிகழ்வான சூரிய கிரகணம் சற்றே தொடங்கியுள்ளது. இன்று காலை சுமார் 8.08 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்வு காலை 11.19 மணி வரை நடைபெறும். குறிப்பாக 9.35 மணி அளவில், நிலவு முழுமையாக சூரியனை மறைக்கிறது.

இந்த முழு கிரகண வடிவம் சுமார் 3 நிமிடங்களுக்கு நிலை கொண்டிருக்கும். இந்த நிகழ்விற்கு பின் நிலவு, சூரியனை முழுமையாக மறைக்காமல், அதன் நடுப்பகுதியை மட்டுமே மறைக்கும். இந்த நிலையில் சூரியனை சிவப்பு நிற வளையம் ஒன்று வட்டமிடும்.

விளம்பரம்

இந்த காட்சியை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது. அது கண்களின் விழித்திருக்கு பாதிப்பு ஏற்படுத்தும். நிலவு சூரியனை கடந்து செல்லும் இறுதி நிமிடங்கள் மிகவும் கடுமையாக காட்சி அளிக்கும். அப்போது சூரிய ஒளியை கட்டுப்படுத்தும் கண்ணாடியுடன் சிவப்பு நிறத்தை ஓரளவு காண முடியும். அதுவும் மேக மூட்டம் இல்லாமல் வானம் தெளிவாக இருந்தால் மட்டுமே சாத்தியம்.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, ஊட்டி, கோவை, ஈரோடு, திருப்பூர், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் கேரள மாநிலம் பாலக்காடு உள்பட தென்னிந்தியாவில் ஓரளவு இந்த சூரிய கிரகணத்தை முழுமையாக காண முடியும்.

விளம்பரம்
தொடர்புடையவை  பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு , 21 நாளில் துாக்கு தண்டனை! புதிய சட்டத்தை இயற்றி ஆந்திர அரசு அதிரடி !!

அதேபோல், இலங்கை, சிங்கப்பூர், சவுதி அரேபியா, கத்தார், மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் சூரிய கிரகணத்தை காண முடியும். இன்று ஏற்படக்கூடிய சூரிய கிரகணம் மிகவும் அரியவகையில் ஒன்று. மீண்டும் இதே போன்ற சூரிய கிரகணம் 2031-ம் ஆண்டு மே 16 அன்று தான் நிகழும்.

விளம்பரம்

Leave a Comment