காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அசாரதான சூழலில் அங்கு மக்களின் மனநலம் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. இது இந்தியாவிற்கு மிக பெரிய சவாலாகும்.
ஸ்ரீநகரின் பழைய நகரதத்தில் மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் இருக்கிறது. மற்ற பகுதிகளை விட நடமாட்டத்திற்கு அதிக கட்டுப்பாடுகள் இங்கு உள்ளன. இது நோயாளிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. பரமுல்லா போன்ற மாவட்ட மருத்துவமனைகளை மக்களால் எளிதாக அணுகமுடியும்.
தகவல்தொடர்பு துண்டிப்பால் எழுந்துள்ள தாக்கம் மற்றும் மக்களின் மனநலம் மீதான அரசியல் முடிவு சில ஆண்டுகளுக்குப் பிறகுதான் அறியப்படும் என்று பெயர் குறிப்பிட விரும்பாத மனநல மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தின் மூத்த மனநல மருத்துவர் ஒருவர் கூறினார். மேலும் அவர் கூறுகையில், “சுமார் 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை மக்கள் எதிர்கொள்ளும் மனநல பிரச்சினைக்கும், அதற்கு சிகிச்சை பெறும் மக்களுக்கு இடையிலான சராசரியில் மிக பெரிய பின்னடைவு சந்திக்கும் அபாயம் ஏற்பட்டது”.
இந்த சராசரியின் இடைவெளி இப்போது குறைந்து வருகிறது, ஆனால் மனநல சிகிச்சை பெற வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு வர இன்னும் சில மாதங்கள் ஆகும். உதாரணமாக, காஷ்மீர் பள்ளத்தாக்கில் 2016ல் இந்திய பாதுகாப்புப் படைகளால் போராளி புர்ஹான் வாணி கொல்லப்பட்ட போது, ஏற்பட்ட கலகத்தில் ஜூலை மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட நாட்களில் ரூ.16,000 கோடிக்கு மேல் மாநிலத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த சம்பவம் நடந்த ஒரு வருடத்திற்குப் பிறகுதான் நோயாளிகள் சிகிச்சைக்காக மறுத்த்துவமனையை அணுகத் தொடங்கினர். மாநிலத்தின் பரபரப்பான காலங்களில் மக்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கிறார்கள், ஆனால் அந்நிலையில் அவர்கள் மனநிலை பாதிப்படைவதை குறித்து கவலைப்படுவதில்லை. பரபரப்புகள் அடங்கிய பின்னரே மனநலம் குறித்தன சிகிக்சைக்கு மக்கள் வருவதாக அவர் விளக்கினார். மேலும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் சிகிக்சையை நாடுகிறார்கள். மீதமுள்ளவர்கள் அதனை சமாளிக்க வேறு வழிகளைக் கண்டுபிடித்து கொள்வார்கள். இங்குள்ள மனிதர்கள் மீண்டெழ கூடிய தன்மை உடையவர்கள் என்பதே இதற்கு உதாரணம்” என்றார்.
காஷ்மீரி பெரியவர்கள் தொழுகையை மனநலத்தை சமாளிக்கும் உத்தியாகவும், குடும்ப உறுப்பினரோடோ அல்லது நண்பர்களோடோ பேசுவதையும், தங்களை பிஸியாக வைத்துக்கொள்வதையோ மனநல சிக்கலுக்கு தீர்வாக பயன்படுத்துகிறார்கள் என்று மெடெசின்ஸ் சான்ஸ் ஃபிரான்டியர்ஸ் ஆய்வு தெரிவித்துள்ளது.
சராசரியாக, பள்ளத்தாக்கில் வசிக்கும் வயதுவந்த ஒருவர் தன் வாழ்நாளில் ஏழுக்கும் மேற்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவங்களை கண்டிருக்கிறார். மேலும், அதன் சிக்கல்களை அனுபவித்திருக்கிறார் என மெடெசின்ஸ் சான்ஸ் ஃபிரான்டியர்ஸ் கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது. அதிர்ச்சிகரமான நிகழ்வுகளின் வெளிப்பாடாக: மனச்சோர்வு, பதட்டம் மற்றும் அதிர்ச்சிக்குப் பிறகான மன அழுத்தப் பாதிப்பு போன்றவை மக்களை பாதிப்படைய செய்துள்ளது. வருமானம் சார்ந்த பிரச்சினைகள், மோசமான உடல்நலம் மற்றும் வேலையின்மை ஆகியவற்றை காஷ்மீரிகள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான அரசியல் மோதல்கள் மற்றும் வன்முறைகள் காரணமாக, போதைப் பழக்கத்தின் வளர்ச்சியையும் காஷ்மீர் கண்டிருக்கிறது என இந்தியாஸ்பென்டின் 2017 நவம்பர் அறிக்கை தெரிவித்துள்ளது.
சாதியா என்ற 13 வயதான சிறுமி கடந்த ஒரு மாதத்தில் செய்ததெல்லாம் வீட்டில் உட்கார்ந்து, அக்கம் பக்கத்திலுள்ள மூன்று உறவினர்களின் வீடுகளுக்குச் செல்வதுதான். “நான் மூச்சுத் திணறல் உணர்கிறேன், எல்லா நேரத்திலும் வீட்டுக்குள்ளேயே இருக்கிறேன், ஆனால் இப்போது எங்களால் என்ன செய்ய முடியும்?” என்று அச்சிறுமி கூறினார்.

ஸ்ரீநகரின் பழைய நகரப் பகுதியில் உள்ள ரெய்னாவாரி என்ற பகுதியில் வசிக்கும் சாதியா, பாதுகாப்புப் படையினரால் பெரிதும் பாதுகாக்கப்பட்டு, தொடர்ச்சியான கட்டுப்பாடுகளையும், ஊரடங்கு உத்தரவுகளையும் எதிர்கொள்கிறார். அச்சிறுமி அவ்வப்போது மயக்கம் சார்ந்த பிரச்சனைக்கும், தலைவலி பிரச்சனைக்கும் ஆளாகிறாள்.
தனது தந்தையின் பாதுகாப்பிற்காக தொடர்ந்து தான் கவலைப்படுவதாகக் கூறுகிறாள். “என் தந்தை காய்கறிகளை வாங்கவோ, அல்லது மஸ்ஜிதிற்கு தொழுகைக்கோ வெளியே செல்லும் போதெல்லாம் நான் எப்போதும் கவலைப்படுகிறேன். அவர் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என தெரிவித்தாள்.
பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக ஆகஸ்ட் 19ஆம் தேதி அன்று அரசாங்கம் கூறிய போதிலும், ஆகஸ்ட் 4 முதல் சாதியா பள்ளிக்கு செல்வதில்லை. நிச்சயமற்ற பாதுகாப்பு நிலைமை காரணமாக பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் பெரும் சிக்கல்களை சந்திக்கின்றன. “நாங்கள் இந்த நேரத்தில் எங்கள் தேர்வுகளை முடித்திருக்க வேண்டும். ஆனால் இப்போது நாங்கள் இருந்த இடத்தில் நாங்கள் சிக்கிக்கொண்டிருக்கிறோம்” என்று சாதியா கூறினாள். மேலும் அவள் வீட்டிற்கு வந்ததிலிருந்து அவளது மயக்கத்தாலும், தலைவலியாலும் உடல் நிலை மோசமடைந்து வருகிறது.
அவளது தந்தை, ஒரு வாஷர்மேன். வேலைக்குச் செல்லவில்லை என்றால் அவளின் கல்வியை ஆதரிக்க முடியாது எனறாள் சாதியா.
“நான் ஒரு பொறியியலாளராக விரும்புகிறேன், ஆனால் இனி என் கனவை நிறைவேற்ற முடியும் என்று எனக்கு நம்பிக்கை இல்லாமல் போகிறது”
செய்தித்தாள்களைப் படிப்பது மூலமாகவோ, தொலைக்காட்சி செய்திகளைப் பார்த்தன் மூலமாகவோ காஸ்மீரின் பெரும்பாலான குழந்தைகள் 370 வது பிரிவை நீக்குவது குறித்து அறிந்திருக்கிறார்கள்.
முற்றும்…
தமிழில் தமிழ்முரசு
நன்றி India Spend