ஈரான் ஜெனரலை கொல்லப்பட்டதால் கால்பந்து பயிற்சி ரத்து

இந்த மாதம் 5ஆம் தேதி முதல் கத்தார்ல் இருக்கும் ஆஸ்பையர் அகாடமியில் கால்பந்து பயிற்சி முகாம் தொடங்க திட்டமிடப்பட்டு, 25 அமெரிக்க வீரர்களை தேர்வு செய்து இருந்தார். இந்நிலையில் அமெரிக்க ஆளில்லவிமானம் மூலம் பாக்தாத் விமான நிலையத்திற்கு அருகே ஈரானிய ஜெனரல் காசெம் சோலைமணியைக் கொன்றது.

அதனால், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் உருவாகி உள்ளது. அமெரிக்க கால்பந்து பயிற்சி ரத்து முடிவை அறிவித்துள்ளது. அமெரிக்காவின் தாக்குதல் சம்பவத்துக்கு ஈரான் பதிலடி கொடுப்பதாக உறுதி கொண்டுள்ளது.

விளம்பரம்

இந்த நிலையில் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கைல், “மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வளர்ந்து வரும் நிலைமை காரணமாக, ஆண்கள் தேசிய அணியின் பயிற்சி முகாமுக்கான கத்தார் பயணத்தை ஒத்திவைக்க அமெரிக்க கால்பந்து முடிவு செய்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.

முதன்முறையாக கத்தார் நாட்டில் ஃபிபா 2022 கால்பந்து உலகக் கோப்பை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment