
இன்று காலை முதலே சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. நள்ளிரவு 12 மணி முதல் காலை 8 மணி வரை பனிமூட்டத்தால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மேலும், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலையில் எதிரே வரும் வாகனங்கள்கூட தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள், தங்கள் வாகனங்களின் முகப்பு விளக்கை எரிய விட்டபடியே சென்றனர்.
விளம்பரம்
இந்த நிலையில், சென்னையில் மீனம்பாக்கம் விமான நிலையத்திலும் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று அதிகாலையில் கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது. இதனால், மஸ்கட், ஆஸ்திரேலியா, டெல்லியில் இருந்து சென்னை வந்த 5 விமானங்கள் ஐதராபாத், திருவனந்தபுரத்துக்கு திருப்பி விடப்பட்டன.
விளம்பரம்