இஸ்ரோவின் அடுத்தடுத்து வரவிருக்கும் பணிகள்.

சந்திரயான்2 விண்கல புறப்பாட்டிற்குப் பிறகு இஸ்ரோ மேலும் பல பணிகளை செயல்படுத்த இருக்கிறது.

சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா-எல்1 என்ற விண்கலத்தை 2020 ஆம் ஆண்டில் விண்ணில் இஸ்ரோவால் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படவுள்ளது. இது இந்தியாவால் சூரியனை ஆராய்ச்சி செய்வதற்கு ஏவப்படவிருக்கும் முதல் விண்கலமாகும். ஆதித்யா-எல்1 கரோனா என்று கூறப்படும் சூரியனைச் சுற்றியுள்ள ஒளிவட்டத்தை ஆய்வு செய்யும்.

விளம்பரம்

அடுத்தகட்டமாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது. ககன்யான் விண்கலத்தில் மூன்று மனிதர்கள் செல்வதற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் தன்னாட்சி கொண்ட விண்கலமாகும். இது 2021 ஆம் ஆண்டில் விண்ணில் இஸ்ரோவால் ஏவப்படவுள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு மையம் 2023 ஆம் ஆண்டில் சுக்ரயான்1 என்னும் சுற்றுகலனை ஏவப்படவுள்ளது. இது வீனஸ் கிரகத்தின் மேற்பரப்பு மற்றும் வளிமண்டலத்தை ஆய்வு செய்யும் என்று கூறப்படுகிறது. வீனஸ் கிரகத்தின் வளிமண்டலம் கார்பன் டை ஆக்சைடால் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

2024 ஆம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தில் இரண்டாம் கட்ட ஆராய்ச்சியை தொடங்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் பெயர் மங்கள்யான்2. இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு மற்றும் வளிமண்டலத்தை ஆய்வு செய்வதோடு கிரகத்தின் கனிம வளங்களையும் ஆய்வு செய்யும் என்று கூறப்படுகிறது.

தொடர்புடையவை  பிரேசிலுக்குச் செல்ல இனி இந்தியர்களுக்கு விசா தேவையில்லை!

இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையத்தை 2030 ஆம் ஆண்டிற்குள் உருவாக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இங்கு 15 முதல் 20 நாட்கள் வரை மனிதர்கள் இருக்கலாம்.

விளம்பரம்

இவை அனைத்தும் அடுத்த 20 ஆண்டுகளுக்குள் இஸ்ரோ செய்து முடிக்க திட்டமிட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

விளம்பரம்

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment