ஈரான் மீது புதிய பொருளாதார தடை

ஈரான் நாட்டு மீது கூடுதலாக பொருளாதார தடையை விதித்துள்ளது அமெரிக்கா.

ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்க படைகள் ஏவுகணை மூலம் தாக்கி கொன்றது.

விளம்பரம்
ஈரான் மீது புதிய பொருளாதார தடை 1
அமெரிக்க-ஈரான் இடையே முற்றும் போர்

இதற்கு பதிலடி தரும் வகையில் ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதனால் இருநாடுகள் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் ஈரான் மீது போரெடுக்கும் சூழலில் அமெரிக்க இல்லை என்பதை அந்நாட்டின் அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். இருப்பினும் பதற்றமான சூழல் இருந்துவருகிறது.

விளம்பரம்

இந்த நிலையில், ஈரான் மீது கூடுதல் பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. ஈரானின்,  உற்பத்தி, சுரங்கம், ஜவுளி துறைகள் மற்றும் அந்நாட்டு உயர் அதிகாரிகள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீதான ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கா இந்த தடையை விதித்துள்ளது.

விளம்பரம்

Leave a Comment