பிரெக்ஸிட் மசோதா வெற்றி, வெளியேறுகிறது இங்கிலாந்து!

ஐரோப்பிய நாடுகளிலிருந்து வெளியேறும் மசோதா நீண்ட இழுபறிக்கு பின்னர் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

உலக கண்டங்களில் ஒன்றான ஐரோப்பாவில் 27 நாடுகள் இருக்கின்றன. இவர்களுக்குள் ஒன்றுமையை மேம்படுத்த ஐரோப்பிய கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது.

விளம்பரம்

வர்த்தகம், குடியுரிமை, வேலைவாய்ப்பு போன்ற துறைகளில் அனைத்து நாடுகளுக்கும் பொதுவான சட்ட விதிகளை இந்த கூட்டமைப்பு கொண்டுள்ளது.

பிரெக்ஸிட் மசோதா வெற்றி, வெளியேறுகிறது இங்கிலாந்து! 1
ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து வெளியேற நடந்த போராட்டம்

ஆனால், இந்த கூட்டமைப்பு விதிகளால் இங்கிலாந்தின் பொருளாதாரம், வேலைவாய்ப்பு போன்றவைகள் மற்ற ஐரோப்பிய நாடுகளால் சுரண்டப்படுவதாக சர்ச்சை எழுந்து போராட்டம் வெடித்தது.

விளம்பரம்

இதனை தொடர்ந்து, கடந்த 2016ஆம் ஆண்டு இங்கிலாந்து பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் வெளியேறுவது என பெரும்பான்மையான மக்கள் முடிவெடுத்தனர்.

இதனால் அந்நாடு பிரதமர் தெரசா மே பதவி விலகினார். அதன் பின்னர் பிரதமரான ஜான்சனும் இந்த விவகாரத்தில் சரிவை சந்தித்தால், கன்சர்வேட்டிவ் கட்சி பெரும்பான்மையை இழந்தது.

விளம்பரம்

இதன்படி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, தேர்தல் நடந்தது. இதில் மீண்டும் கன்சர்வேட்டிவ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றது.

தொடர்புடையவை  அமெரிக்காவில் நிலநடுக்கம்! கஸ்டாவஸ் பகுதியில் அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சி!!

இதனைத்தொடர்ந்து பிரெக்ஸிட் விவகாரம் வேகம் எடுத்தது. இந்த வகையில் பிரெக்ஸிடி மசோதாவை நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

விளம்பரம்

இதற்கு முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி உள்பட பிற கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தனர். இருப்பினும் பெரும்பான்மை பெற்று இந்த மசோதா வெற்றி பெற்றுள்ளது. தற்போது இந்த மசோதா மேலவையில் தாக்கல் செய்யப்படும்.

அங்கும் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் வருகின்ற 31ஆம் தேதி ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து இங்கிலாந்து வெளியேறுகிறது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment