இலங்கை பிரதமர் இந்தியா வருகை!!

இலங்கை பிரதமர் இந்தியா வருகை!! 1
The former President of Sri Lanka, Mr. Mahinda Rajapaksa meeting the Prime Minister, Shri Narendra Modi, in New Delhi on September 12, 2018.

கடந்த நவம்பர் இலங்கையில் நடந்த அதிபர் தேர்தல் நடந்தது இதில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றிருந்தாலும் அவர் தனது சகோதரான முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேவை பிரதமர் ஆக்கினார்.

பிரதமராக பதவி ஏற்ற பிறகு மகிந்தா ராஜபக்சே அடுத்த மாத தொடக்கத்தில் முதல்முறை பயணமாக இந்தியா வருகை தர உள்ளார். இதற்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இந்த செய்தியை ‘தி சண்டே மார்னிங்’ என்ற இலங்கை செய்தி இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

விளம்பரம்

புதியதாக ஆட்சி அமைத்துள்ள இலங்கை அரசுடன் வலுவான உறவை அமைப்பதிலும், தமிழர் வாழும் பகுதிகளில் வளர்ச்சிக்காக நிதிஉதவி அளிப்பதிலும் இந்தியா ஆர்வமாக இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.

இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே இந்த பயணத்தின் மூலம் பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார். இருதரப்பு உறவுகள், தமிழர் பிரச்சினை போன்ற விஷயங்கள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் என்று தெரிகிறது. தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வாக 13-வது அரசியல் சட்ட திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துமாறு தமிழ் தேசிய கூட்டணி வற்புறுத்தி வரும் நிலையில், ராஜபக்சே இந்தியா வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment