கார்த்தியின் அடுத்த படம் முத்தையா இயக்கத்திலா?

கார்த்தியின் அடுத்த படம் முத்தையா இயக்கத்திலா? 1

கார்த்தியின் கைதி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், அதை அடுத்து வெளியான தம்பி படமும் நல்ல விமர்சனத்தை கொண்டிருக்கிறது. இந்த நிலையில், நடிகர் கார்த்தி சுல்தான், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த படங்களை முடித்து விட்டு பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படங்களுக்கு பிறகு இயக்குனர் முத்தையா இயக்கத்திலும் நடிக்க உள்ளார். இதற்கு முன் குட்டிப்புலி, கொடிவீரன் ஆகிய படங்களில் சசிகுமாரையும், மருது என்ற படத்தில் விஷாலையும், தேவராட்டம் படத்தில் கவுதம் கார்த்திக்கையும் இயக்கி உள்ளார் .

விளம்பரம்

கொம்பன் படத்துக்கு பிறகு மீண்டும் கார்த்தியை வைத்து படம் இயக்குகிறார். சூர்யா இந்த படத்தை தயாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் வரும் ஜூன் மாதம் தொடங்குகிறது.

விளம்பரம்

Leave a Comment