ரூ.6,608 கோடி திட்டங்களுக்கு அரசு அனுமதி!

பல்வேறு துறையில் ரூ.6,608 கோடி அளவிலான தொழில் திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு அனுமதித்துள்ளது.

ரூ.6,608 கோடி திட்டங்களுக்கு அரசு அனுமதி! 1

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட குழு ஆலோசனை குழுவில் அனைத்து துறை உயர் அதிகாரிகளும் துணை முதல்வர் பன்னீர்செல்வமும் கலந்துகொண்டார்.

விளம்பரம்

இதன் முடிவில் தூத்துக்குடி, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, திருச்சி, பெரம்பலூர், கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கு ரூ.6,608 கோடி மதிப்புள்ள 15 தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சுமார் 6,673 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment