ஏமனில் இராணுவ தளம் மீது நடைபெற்ற தாக்குதலில் சுமார் 80 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.
விளம்பரம்
இந்த நிலையில், வடமேற்கில் மரிப் மாகாணத்தின் அல்-மிலா பகுதியில் ராணுவ பயிற்சி முகாமை குறிவைத்து நேற்று ஏவுகணை தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இந்த தாக்குதலில் 24 வீரர்கள் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர்.
ஆனால் மருத்துவமனை தரப்பில் சுமார் 80 பேர் மரண அடைந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றன.
விளம்பரம்
இத்தாக்குதலுக்கு ஹெளதி கிளர்ச்சியாளர்கள் மீது குற்றசாட்டு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்கவில்லை.
விளம்பரம்