மங்களூருவில் விமான நிலையத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட லேப்டாப் பையால் பாதுகாப்பு அசச்சுருத்தல் ஏற்பட்டது.
விமான நிலையத்திற்கு வெளியே பயணிகளுக்காக பகுதியில் கைவிடப்பட்ட பை வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விஐபி வாகனங்கள் பார்க்கிங் பகுதிக்கு அருகில் இருக்கும் டிக்கெட் கவுண்டருக்கு அருகில் இரண்டு பேர் ஆட்டோவில் வந்து பையை விட்டுச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமான நிலைய நுழைவாயிலுக்கு அருகில் கவனிக்கப்படாமல் கிடந்த பையை காலை 8.45 மணியளவில் விமான நிலைய பாதுகாப்புப் படையினர் அந்த இடத்திலிருந்து அகற்றினர்.
இதற்கிடையில், வெடிகுண்டு அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு விமான நிலையத்தில் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், மங்களூரு விமான நிலையத்தில் கைவிடப்பட்ட பை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு வழங்கப்பட்டது.